மின் தூக்கியில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; தாமதமான டெஸ்ட் போட்டி!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் லிஃப்டில் சிக்கிக் கொண்டதால் உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட வேடிக்கை சம்பவம்.
மின் தூக்கியில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; தாமதமான டெஸ்ட் போட்டி!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் லிஃப்டில் சிக்கிக் கொண்டதால் உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட வேடிக்கை சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாம் நடுவர் இல்லாததால் போட்டியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மூன்றாம் நடுவரான ரிச்சர்டு இல்லிங்வொர்த் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மின் தூக்கிக்குள் (லிஃப்டில்) மாட்டிக் கொண்டார். இதனால் ஆட்டம் தொடங்குவதற்கு சற்றுத் தாமதமானது. இந்த சம்பவம் மைதானத்தை சிறிது வேடிக்கையாக மாற்றியது. அப்போது பேட்டிங்கில் இருந்த டேவிட் வார்னர் இந்த சம்பவத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார். 

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்தப் பதிவில் தெரிவித்ததாவது: மூன்றாம் நடுவர் இல்லாததால் ஆட்டத்தில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நடுவர் லிஃப்டினுள் மாட்டிக் கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com