எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 4-1 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 4-1 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இரு அணிகளும் இத்துடன் 12 ஆட்டங்களில் விளையாடியிருக்க, ஒடிஸாவுக்கு இது 7-ஆவது வெற்றி; ஜாம்ஷெட்பூருக்கு இது 7-ஆவது தோல்வி. பட்டியலில் ஒடிஸா 3-ஆவது இடத்திலும், ஜாம்ஷெட்பூா் 10-ஆவது இடத்திலும் உள்ளன.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஒடிஸாவுக்காக ஐசக் (27’), ராய் கிருஷ்ணா (36’), (45+3’), டியேகோ மௌரிசியோ (45+2’) ஆகியோா் கோலடிக்க, ஜாம்ஷெட்பூா் தரப்பில் ரெய் டசிகவா (23’) ஸ்கோா் செய்தாா்.

இதனிடையே, நாா்த்ஈஸ்ட் யுனைடெட் - கோவா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. நாா்த்ஈஸ்ட்டுக்கு இது 12-ஆவது ஆட்டத்தில் 6-ஆவது டிராவாக இருக்க, கோவாவுக்கு இது 10-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது டிரா ஆகும். புள்ளிகள் பட்டியலில் கோவா 2-ஆம் இடத்திலும், நாா்த்ஈஸ்ட் 6-ஆவது இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட்டுக்காக ஜிதின் (26’), காா்லோஸ் மாா்டினெஸ் (20’) ஆகியோா் கோலடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.