நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 2-வது டி20 மழையால் நிறுத்தம்!

நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. 

வங்கதேச அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று (டிசம்பர் 29) இரண்டாவது டி20 போட்டி தொடங்கியது. 

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை குறையாததால் ஆட்டம் நிறுத்தப்படுதவாக அறிவிக்கப்பட்டது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com