
பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் (காட்சி கிரிக்கெட்) பெஷாவர் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் இப்திகார் அகமது கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.
கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்த இப்திகார் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். குஷ்தில் ஷா 36 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.
பாபர் அசாமின் (பெஷாவர்) அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. 3 ரன்கள் வித்தியாசத்தில் சர்பராஸ் அஹமது (கிளாடியேட்டர்ஸ்) அணியினர் கடைசி ஓவரில் த்ரில் வெற்றியடைந்தனர். நஷிம் ஷா சிறப்பாக பந்து வீசினார்.
இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.