தில்லி டெஸ்ட் அணியில் ஸ்ரேயஷ் ஐயர்: பிசிசிஐ அறிவிப்பு! 

காயம் காரணமாக விலகியிருந்த ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்ற பிறகே அவரால் இந்திய அணியினருடன் மீண்டும் இணைய முடியும். 

ஷ்ரேயஸ் ஐயர் விளையாடாத நிலையில் சூர்யகுமார் யாதவ்  அவருக்கு பதிலாக அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, பிப்ரவரி 17 முதல் தில்லியில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்டில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

“இந்திய பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர்முதுகில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை வெற்றிகரமாக முடித்துள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான மாஸ்டர்கார்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக புதுதில்லியில் அணியுடன் இணைவார்” என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com