டபிள்யூபிஎல்-லில் அனுமதி இல்லை: பாகிஸ்தான் கேப்டன் வருத்தம்

டபிள்யூபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனைகள் இடம்பெறாதது பற்றி அந்நாட்டு வீராங்கனை...
டபிள்யூபிஎல்-லில் அனுமதி இல்லை: பாகிஸ்தான் கேப்டன் வருத்தம்

டபிள்யூபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனைகள் இடம்பெறாதது பற்றி அந்நாட்டு வீராங்கனை உரூஜ் மும்தாஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

டபிள்யூபிஎல் போட்டிக்கான வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். 

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

ஐபிஎல் போட்டி போல டபிள்யூபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு இடமில்லை. இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான உரூஜ் மும்தாஜ் ஒரு பேட்டியில் கூறியதாவது:

டபிள்யூபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனைகள் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. எல்லா வாய்ப்புகளும் நியாயமாக இருக்க வேண்டும். எல்லா வாய்ப்புகளும் மகளிர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். சம வாய்ப்புகள் இரு நாடுகளின் தரத்துக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன என்றார். 

பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப், டபிள்யூபிஎல் போட்டி பற்றி கூறியதாவது:

லீக் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அது துரதிர்ஷ்டவசமானது. லீக் போட்டிகளில் விளையாட எங்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அது அப்படித்தான். அதை எங்களால் தடுக்க முடியாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com