தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகளிர் டி20: இந்திய அணி வெற்றி!

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 5:11 pm

DIN

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்று சந்தித்தது. 

இவ்விரு அணிகளில் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வர, மேற்கிந்தியத் தீவுகளோ இங்கிலாந்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் மோதியது. 

20 ஓவர் முடிவில் மே.இ.தூவுகள் அணி 118/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெய்லர் 42 ரன்களும், கேம்பெல்லே 30 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 

Story image

அடுத்து ஆடிய இந்திய அணி 18.1 ஓவரில் 119/4 ரன்களை எடுத்து வென்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 44 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 

தீப்தி சர்மாவுக்கு ஆட்டநாயகி விருது கிடைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.