அதிக சர்வதேச ரன்கள்: தொட முடியாத உயரத்தில் சச்சின்!

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 25,000 ரன்களுடன் 6-ம் இடத்தில் உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.
அதிக சர்வதேச ரன்கள்: தொட முடியாத உயரத்தில் சச்சின்!

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 25,000 ரன்களுடன் 6-ம் இடத்தில் உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

இந்த டெஸ்டில் 44, 20 என மொத்தமாக 64 ரன்கள் எடுத்தார் கோலி. இந்த டெஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ரன்களைக் கடந்தார் கோலி. டெஸ்டில் 8195 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 12809 ரன்களும் டி20யில் 4008 என மொத்தமாக 25,012 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ரன்களை வேகமாகக் கடந்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கோலி. இவர் 549 இன்னிங்ஸிலும் சச்சின் 577 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை அடைந்துள்ளார்கள்.

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலில் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர். சமகால வீரர்களில் கோலி 25,012 ரன்களும் இங்கிலாந்தின் ஜோ ரூட் 17800 ரன்களும் எடுத்துள்ளார்கள். இதனால் சச்சினின் 34,000 ரன்களைத் தொடுவது கடினம் என்று அறியப்படுகிறது. 

1989 முதல் 2013 வரை விளையாடிய சச்சின் தற்போது யாரும் தொட முடியாத உயரத்தில் உள்ளார். அப்படியே நெருங்கினாலும் கோலியால் மட்டுமே சாத்தியம். அவரும் இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்கிற கேள்வி உள்ளதால் சச்சின் சாதனையை நெருங்குவது அவ்வளவு சுலபமல்ல என்றுதான் கூறவேண்டும். 

அதிக சர்வதேச ரன்கள்

1. சச்சின் - 34357 ரன்கள்    
2. சங்கக்காரா - 28016 ரன்கள்
3. பாண்டிங் - 27483 ரன்கள்    
4. ஜெயவர்தனே - 25957 ரன்கள்    
5. காலிஸ் - 25534 ரன்கள்    
6. கோலி - 25012 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com