இந்திய ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளையும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாகப் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்த அணியில் இடம்பெறவில்லை. மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஜை ரிச்சர்ட்சன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி

பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், டிராவிட் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com