தாயாருக்கு உடல்நலக்குறைவு: 3-வது டெஸ்டிலிருந்து ஆஸி. கேப்டன் விலகல்!

சொந்தக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள ஆஸி. கேப்டன் 3-வது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தாயாருக்கு உடல்நலக்குறைவு: 3-வது டெஸ்டிலிருந்து ஆஸி. கேப்டன் விலகல்!

சொந்தக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள ஆஸி. கேப்டன் 3-வது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.

காயம் காரணமாக வார்னர், ஹேசில்வுட், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஷ்டன் அகர் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் 2-வது டெஸ்ட் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளார்கள். தனக்கு முதல் குழந்தை பிறப்பதையொட்டி 2-வது டெஸ்டுக்கு முன்பு நாடு திரும்பினார் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன். ஸ்வெப்சன் இந்தியாவுக்குத் திரும்புவது உறுதியாகிவிட்ட நிலையில், கேப்டன் கம்மின்ஸ் 3-வது டெஸ்டைத் தவறவிடவுள்ளார். 

இந்நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய கம்மின்ஸ், 3-வது டெஸ்டில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கம்மின்ஸ் கூறியுள்ளதாவது:

என் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்கிற காரணத்துக்காக இந்தச் சமயத்தில் இந்தியாவுக்குத் திரும்புவதில்லை என்கிற முடிவை எடுத்துள்ளேன். எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் கம்மின்ஸ். இதையடுத்து இந்தூர் டெஸ்டில் ஆஸி. அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார் ஸ்மித். கம்மின்ஸ் கேப்டனான பிறகு இருமுறை ஆஸி. அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார் ஸ்மித். ஒருவேளை கம்மின்ஸ் 3-வது டெஸ்டுக்குப் பிறகும் இந்தியாவுக்குத் திரும்பவில்லையெனில் 4-வது டெஸ்டிலும் ஸ்மித் கேப்டனாகச் செயல்படுவார். 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஆஸி. அணியின் கேப்டனாக கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்போதைய நிலைமையில் அவர் இந்தியாவுக்குத் திரும்புவாரா என்பது இனிமேல் தான் தெரியவரும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com