மகளிர் டி20: உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது.
மகளிர் டி20: உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது.

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக  மூனே ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார்.

பின்னர், 157 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்கம்  முதலே ஆஸி. பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய துவங்கினாலும் லாரா உல்வார்டினின் நிதானமான ஆட்டத்தால் ரன்கள் ஏறத் தொடங்கியது. 

இருப்பினும் அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்ததால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 137 ரன்களை எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணியிடம் தோல்வியடைந்தது.

இதனால், 6-வது முறையாக ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com