இலங்கை அணி பந்து வீச்சு: டி20யில் முதன்முறையாக சுப்மன் கில் சேர்ப்பு!
இந்தியா இலங்கைக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.


ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கும் இந்த ஆண்டில், இந்திய அணியின் அட்டவணையில் டி20 தொடர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. என்றாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முழுமையான அணியைத் தேர்வு செய்ய இந்தத் தொடர்கள் முக்கியத்தும் பெறுகின்றன.
இந்தியா - இலங்கை மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
இலங்கை அணி டாஸ் வென்று பந்து விச்சினை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா.
இந்திய அணியில் சுப்மன் கில், ஷிவம் மாவி முதன்முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர். மேலும் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. சிஎஸ்கே வீரர் ருதுராஜ் இடமில்லை.
இந்திய அணி:
இஷான் கிஷன், கில், சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, தீபக் ஹூடா, அக்ஷர் படேல், ஹர்ஷல் படேல், ஷுவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திரா சஹால்.
இலங்கை அணி:
பதும் நிஷாங்கா, குஷால் மெண்டிஸ், தனஞ்செய டி செல்வா, சரிதா அசலங்கா, பனுகா ராஜபக்ஷா, தசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, மகேஷ் தீக்ஷனா, கசுன் ரஞ்சிதா, தில்ஷன் மதுஷனகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...