நிறுத்தப்பட்ட சிட்னி டெஸ்ட்: ஸ்டீவ் வாஹ் அதிருப்தி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளக்கொளியைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.
நிறுத்தப்பட்ட சிட்னி டெஸ்ட்: ஸ்டீவ் வாஹ் அதிருப்தி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளக்கொளியைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.

சிட்னியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நடைபெறுகிறது. இன்று மதியம் 2.30 மணிக்கு முன்பே போதிய வெளிச்சம் இல்லாத காரணத்துக்காக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. லைட் மீட்டரில் சரியான அளவு காண்பிக்காததால் ஆட்டத்தை நடுவர் தொடங்கவில்லை. இதன்பிறகு ஆட்டம் மீண்டும் 4.45 மணிக்குத் தொடங்கி மீண்டும் நிறுத்தப்பட்டது. 

டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தபோது வெளிச்சமின்மை, மழை காரணங்களால் முதல் நாள் ஆட்டத்தை மேலும் தொடர முடியாமல் போனது. இதனால் டெஸ்ட் ஆட்டத்தைக் காண வந்த 31,000 ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். சிட்னி மைதானத்தில் விளக்கொளி வசதி இருந்தும் அதைப் பயன்படுத்தாதது பற்றி ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

ஏராளமான போட்டிகள் உருவாகியிருப்பதை டெஸ்ட் கிரிக்கெட் புரிந்துகொள்ள வேண்டும். விளக்கொளியைப் பயன்படுத்தாமல் வெளிச்சமின்மை காரணமாக வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பியது சரியல்ல. ஆட்டம் மீண்டும் தொடங்காததன் காரணத்தைப் புரிந்துகொள்ளாத ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com