அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட்!

இந்திய அணியின் இளம் வீரர்கள் வளர்ந்து வரும் காலத்தில் மற்றவர்கள் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 
அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட்!

இந்திய அணியின் இளம் வீரர்கள் வளர்ந்து வரும் காலத்தில் மற்றவர்கள் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அக்சர் படேல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய போதிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இரண்டாவது டி20 போட்டியில் ஹர்சல் படேல் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்றையப் போட்டியில் அவர் அதிமான நோ-பால்களை வீசியதும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து, அவரது பந்துவீச்சு மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங்குக்கும், இந்திய அணியின் இளம் வீரர்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது: எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் வீரர்கள் யாரும் வைட் பால் மற்றும் நோ பால் வீச விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் யாரும் நோ-பால் வீச விரும்ப மாட்டார்கள். சில நேரங்களில் இளம் வீரர்கள் இது போன்ற கடினமான சூழலை எதிர்கொள்வார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டும். அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என நான் நினைக்கிறேன். இது மிகவும் கடினமானது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கற்றுக் கொள்வது என்பது சுலபமான காரியம் கிடையாது. இந்த இளம் வீரர்களிடத்தில் நாம் சற்று பொறுமை காக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.

இலங்கைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோ பால்களை வீசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com