டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேனா?: ரோஹித் சர்மா பதில்

டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேனா?: ரோஹித் சர்மா பதில்

டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் குவாஹட்டியில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டார். இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது:

இது 50 ஓவர் உலகக் கோப்பை வருடம். சிலரால் எல்லா வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாட முடியாது. அட்டவணையைப் பார்த்தாலே தெரியும், அடுத்தடுத்து ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சிலருடைய பணிச்சுமையைக் கருதி அவர்களுக்கு ஓய்வு அளிக்கிறோம். எனக்கும் அப்படித்தான். 

6 டி20 ஆட்டங்கள் தான் உள்ளன. அதில் 3 ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. நியூசிலாந்துக்கு எதிராக மேலும் 3 டி20 ஆட்டங்கள் உள்ளன. ஐபிஎல் போட்டி தொடங்கும்வரை வீரர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டை நான் விட்டுவிடவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com