பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றின் முடிவில் 6-ம் இடத்தையே பிடித்தது. 2019, 2020, 2021, 2022 என கடந்த நான்கு ஆண்டுகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 6-ம் இடத்தையே பிடித்தது. ஐபிஎல் போட்டியில் இருமுறை மட்டுமே (2008, 2014) பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.  

2022 செப்டம்பர் மாதம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக டிரவர் பேலிஸ் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய கேப்டனாக ஷிகர் தவன் தேர்வாகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபகாலம் வரைக்கும் இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த சுனில் ஜோஷி, இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 2008, 2009-ல் ஆர்சிபி அணியில் இடம்பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com