ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெஸ்ஸியைச் சந்தித்த அமிதாப் பச்சன் (விடியோ)

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், ஆட்டம் தொடங்கும் முன்பு மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

News image
Updated On :20 ஜனவரி 2023, 9:47 am

DIN

ரியாத் நகரில் நடைபெற்ற கண்காட்சி கால்பந்து ஆட்டத்தில் பிரபல வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோவைச் சந்தித்தது குறித்த காணொளியை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் அமிதாப் பச்சன்.

பாரிஸ் செயின் ஜெர்மன் (பி.எஸ்.ஜி.) -  ரியாத் சீசன் (அல் நசார் லெவன்) அணிகளுக்கு இடையிலான கண்காட்சி ஆட்டம் சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் நடைபெற்றது. பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே இடம்பெற்றார்கள். ரியாத் சீசன் அணிக்கு ரொனால்டோ தலைமை தாங்கினார். இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அணி 5-4 என வென்றது. 

மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய இருவரும் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். மெஸ்ஸி ஒரு கோலும் ரொனால்டோ இரு கோல்களும் அடித்தார்கள். இருவரும் ஒரு மணி நேரம் களத்தில் விளையாடினார்கள். 

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், ஆட்டம் தொடங்கும் முன்பு மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன் காணொளியைத் தன் ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளார். 

வரும் ஞாயிறன்று சவுதி ப்ரோ லீக் போட்டியில் அல் நசார் அணிக்காக அறிமுகம் ஆகவுள்ளார் ரொனால்டோ. ஐரோப்பிய கிளப் கால்பந்தை விட்டுவிட்டு சவுதி அரேபிய கிளப் அணியில் ரொனால்டோ இணைந்துள்ளதால் மெஸ்ஸி - ரொனால்டோ இருவரும் கடைசியாக மோதிய ஆட்டம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு இருவரும் 2020-ல் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சந்தித்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.