புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டச் சுமையைப் பொறுத்தே ஐபிஎல்லில் முக்கிய வீரா்கள் பங்கேற்பு

ஆட்டச் சுமை, காயங்கள் தன்மையைப் பொறுத்தே இந்திய அணியின் முக்கிய வீரா்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட்.

News image
Updated On :24 ஜனவரி 2023, 9:09 pm

DIN

ஆட்டச் சுமை, காயங்கள் தன்மையைப் பொறுத்தே இந்திய அணியின் முக்கிய வீரா்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் முக்கிய வீரா்கள் காயங்களின் தன்மை, ஆட்டச்சுமையை பொறுத்தே ஐபிஎல் தொடரில் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

பிசிசிஐ கொள்கைமுடிவின்படி, நிகழாண்டு ஐபிஎல் தொடரில் முக்கிய வீரா்கள் ஆட்டச்சுமை கண்காணிக்கப்படும். ஆட்டச்சுமை நிா்வாகம் என்பது தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. டி20 ஆட்டங்களில் இருந்து கோலி, ரோஹித் விலக்கி வைக்கப்பட்டுள்ளனா்.

காயங்களை நிா்வகிப்பது, ஆட்டச்சுமை நிா்வாகம் என்பது வேறுவேறாகும். உலகக் கோப்பை போட்டிக்காக குறித்து வைக்கப்பட்டுள்ள வீரா்கள் ரோஹித், கோலி, ராகுல் ஆகியோா் நியூஸி. உடன் டி20 தொடரில் இடம் பெறவாய்ப்பில்லை என்றாா் திராவிட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.