டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம்: டேவிட் வார்னர் கவலை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கும் வீரர்களை எண்ணி மகிழ்கிறேன்.


டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் கவலையளிப்பதாக ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இதுபற்றி வார்னர் பேசியதாவது:
அடுத்த 5-10 வருடங்களில் என்ன நடக்கும், கிரிக்கெட் எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் கவலை ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கும் வீரர்களை எண்ணி மகிழ்கிறேன். அந்தப் பெருமிதம் தான் உங்கள் வாழ்க்கையின் முக்கியமானதாக இருக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது அற்புதமானது. உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக் கூடியது. கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் உங்களை ஒப்பிட்டுக்கொள்ளவும் வாய்ப்பை உருவாக்கும். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட எண்ணினால் அதற்குரிய ஸ்கோர்களைக் காண்பிக்க வேண்டும். ஒருநாள், டேவீஸிடம் (சிட்னி தண்டர் வீரர்) பேசிக்கொண்டிருந்தேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவே ஆர்வமாக உள்ளார். அவர் இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது போலத் தெரியவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சாதிப்பதும் சுலபமல்ல. டெஸ்டில் விளையாடாமல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் விளையாடியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் தான் பலருக்கும் ஆர்வம் உள்ளது. ஆனால் உங்கள் பணத்தின் மதிப்பை அறிய வேண்டுமென்றால் உங்களுக்கென்று நற்பெயரை எடுக்கவேண்டும். அதுதான் நல்லது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...