சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை ரத்து செய்து மீண்டும் விளையாடியவர்கள்! 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வை அறிவித்த பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள்... 
கோப்புப் படம் ( டிவைன் ப்ராவோ, அப்ரிடி, பீட்டர்சன்)
கோப்புப் படம் ( டிவைன் ப்ராவோ, அப்ரிடி, பீட்டர்சன்)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜூலை 6இல் அறிவித்த தமிம் இக்பால், ஜூலை 7இல் தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.  இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்சியாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. 

தமிம் இக்பால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்புக்கு பிறகு தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

தமிம் இக்பால் மட்டுமல்ல இது போல பல கிரிக்கெட் வீரர்கள் செய்துள்ளார்கள். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரபல பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்டிரி. 

ஷாகித் அப்ரிடி: பிரபல பாகிச்தன வீரர் 2006இல் டெஸ்டிலும் 2011இல் ஒருநாள் போட்டியிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் 2017இல் அதை திரும்பப் பெற்றார். 

டிவைன் ப்ராவோ: பிரபல மே.இ.தீவுகள் அணி ஆல்ரவுண்டர் டிவைன் ப்ராவோ 2018இல் ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் 2020இல் திரும்பவும் விளையாடினார். 

பிராண்டன் டெய்லர்: ஜிம்பாப்வே வீரர் பிராண்டன் டெய்லர் 2015இல் ஓய்வை அறிவித்து பின்னர் 2017இல் திரும்பப் பெற்றார். 

இம்ரான் கான்: பாகிஸ்தன கிரிக்கெட் வீரர் 1987இல் ஓய்வு பெற்று பின்னர் 1992இல் விளையடைனார். 

மொயின் அலி: பிரபல இங்கிலாந்து வீரர் 2021இல் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் 2023 ஆஷஸ் போட்டியில் மீண்டும் விளையாடி வருகிறார். 

பனுகா ராஜபக்‌ஷா: இலங்கை வீரர் 2022இல் ஒய்வு பெற்று பின்னர் அமைச்சர் கேட்டுக்கொண்டதா்ல் 10 நாளில் மீண்டும் விளையாட சம்மதித்தார். 

ஜாவேட் மியாண்டட்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 1996இல் ஓய்வு அறிவித்து பின்னர் 10 நாள்களில் மீண்டும் விளையாட சம்மதித்தார். 

கெவின் பீட்டர்சன்: பிரபல இங்கிலாந்து பேட்டர் பீட்டர்சன் 2011இல் டி20, ஒருநாள் போட்டிகளில் ஓய்வௌ அறிவித்து பின்னர் அதே ஆண்டு திரும்பப் பெற்றார். 

அம்பத்தி ராயுடு: 2019இல் உலகக் கோப்பை போட்டிகளில் தேர்வு செய்யாததால் ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ராயுடு பின்னர் அதே ஆண்டு மீண்டும் அதனை ரத்து செய்வதாக அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாட இந்த முடிவு எடுக்கப்பட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com