துலீப் கோப்பை போட்டியில் மேற்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் புஜாரா நல்ல ஃபார்மில் இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சரியாக விளையாடவில்லை. அடுத்து மே.இ.தீவுகள் அணிகளுக்கான இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மட்டும் சேர்க்காதது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இதையும் படிக்க: உலக சாதனைக்கு மிக அருகில் ஸ்டூவர்ட் பிராட்!
இந்நிலையில், துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் அணிகளுக்கான போட்டியில் டிரா ஆனாலும் இறுதிப் போட்டிக்கு மேற்கு மண்டலம் தேர்வாகியுள்ளது. துலீப் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலமும் - மேற்கு மண்டலமும் மோதவுள்ளன.
இதையும் படிக்க: அரையிறுதியில் சிந்து, லக்ஷயா
துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் புஜாரா 2வது இன்னிங்ஸில் சதமடித்ததால் முதல் தர போட்டியில் 60 சதங்களுடன் விஜய் ஹசாரே சாதனையை சமன் செய்துள்ளார். சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் 81 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.
முதல் தர போட்டியில் 60 சதங்கள், 76 அரை சதங்களுடன் 19,405 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முதல் தர போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்:
சுனில் கவாஸ்கர்- 81
சச்சின் டெண்டுலகர் - 81
ராகுல் திராவிட் - 68
செதேஷ்வர் புஜாரா- 60
விஜய் ஹசாரே- 60
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



