உலக சாதனைக்கு மிக அருகில் ஸ்டூவர்ட் பிராட்! 

பிரபல இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் புதிய உலக சாதனையை நிகழ்த்துவாரென கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
உலக சாதனைக்கு மிக அருகில் ஸ்டூவர்ட் பிராட்! 

ஸ்டூவர்ட் பிராட் என்றதும் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்துதான் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்த மோசமான நிகழ்விற்கு பின்னர் பிராட் தன்னை சிறந்த டெஸ்ட் பௌலராக நிலை நிறுத்தியுள்ளார். 37 வயதான பிராட் டெஸ்டில் 593 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது இரண்டாவது அதிகபட்ச வேகப்பந்து வீச்சாளர்களின் டெஸ்ட் விக்கெட் ஆகும். முதலிடத்தில் ஆண்டர்சன் (688) இருக்கிறார். 

சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வரிசையில் பிராட் 5வது இடத்தில் உள்ளார். முதலிடம் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள். வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2வது இடம். 

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அசத்திவரும் பிராட் டேவிட் வார்னரை மட்டும் இதுவரை 17 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். 

இதற்கு முன்பாக ஒரு பந்து வீச்சாளர் ஒரே வீரரை அதிக முறை விக்கெடெடுத்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் க்ளென் மெக்ரத் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின்  மைக் அதெர்டமை 19 முறை விக்கெட் எடுத்துளார் மெக்ரத். இரண்டாமிடத்தில் அலெக் பெட்ஸெர் (18 விக்கெட்டுகள் - அர்துல் மோரிஸ்). மூன்றாவது இடத்தில்தான் பிராட் (17 விக்கெட்டுகள்- வார்னர்) இருக்கிறார். 

இன்னும் 2 டெஸ்ட் ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் அதாவது 4 இன்னிங்ஸ்கள் மீதமிருக்கிறது. இதில் 3 முறை வார்னரை விக்கெட் இழக்க செய்தால் ஸ்டூவர்ட் பிராட் ஒரே வீரரை அதிக முறை விக்கெட் இழக்க செய்தவர் என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்துவார். 

வார்னர் மாதிரியான நட்சத்திர வீரரை இப்படி விக்கெட் எடுப்பது மிகப்பெரிய விஷயம் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com