பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் தமிம் இக்பால்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  தமிம் இக்பால் நேற்று (ஜூலை 6) அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

News image
Updated On :7 ஜூலை 2023, 7:10 pm IST

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  தமிம் இக்பால் நேற்று (ஜூலை 6) அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 7) தனது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

வங்கதேச அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம்  தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், தமிம் இக்பால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்புக்கு பிறகு தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

முன்னதாக நேற்று (ஜூலை 6) தனது ஓய்வு முடிவை அறிவித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இது எனக்கான முடிவு. நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். நான் சிறப்பாக விளையாட முயற்சித்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த பயணத்தில் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். எனது ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பு மற்றும் நம்பிக்கை என்னை வங்கதேசத்துக்காக சிறப்பாக விளையாடச் செய்தது. வாழ்க்கையில் எனது அடுத்த அத்தியாயத்துக்காக நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது வேண்டுதலில் நானும் இருப்பேன் என்றார்.

தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றதால் தமிம் இக்பால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.