மத்தியப் பிரதேசத்தின் தாதியா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
ஜூலை 30-ல் மத்தியப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் கன்ஷ்யாம் சிங், பாஜக சார்பில் அசுதோஷ் திவாரியும் போட்டியிட்டனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மொத்தம் உள்ள 15 சுற்றுகளில் எட்டாவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் 38,264 வாக்குகளையும், திவாரி 31,681 வாக்குகளையும் பெற்றனர்.
பாஜகவின் அசுதோஷ் திவாரியை விட 6,583 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், ஆசாத் சமாஜ் கட்சி வேட்பாளர் தாமோதர் யாதவ் 26,506 வாக்குகளைப் பெற்றார்.
மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாரதிக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லி நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்ததாலும், அதைத் தொடர்ந்து அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாலும் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தாதியா இடைத்தேர்தலில் கன்ஷ்யாம் சிங் மற்றும் அசுதோஷ் திவாரி உள்பட மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஜூலை 30 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 71.44 சதவீத வாக்குகள் பதிவாகின.
காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளனர். கட்சித் தொண்டர்கள் இனிப்பைப் பரிமாறி வருகின்றனர்.
After trailing in the first two rounds, Congress candidate Ghanshyam Singh surged ahead with a lead of 6,583 votes over BJP's Ashutosh Tiwari as counting was underway on Monday for the Datia assembly bypoll in Madhya Pradesh, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

குல்காம் பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸ் கண்டனம்
ராகுல் பேச அனுமதி மறுப்பு! ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும்: மாணிக்கம் தாகூர்

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா மாணவா்கள் - இளைஞா்களுக்கு கிடைத்த வெற்றி! காங்கிரஸ்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



