ருதுராஜ் கேப்டன்: ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி! 

சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆடவர் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  
படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்

சீனாவில் நடைபெற உள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆடவர், மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹாங்சோ நகரில் செப்.23 முதல் அக்.8வரை நடைபெறுமென ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பாக இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டிற்காக விளையாட அனுமதி பெறவில்லை. இந்த முறை பிசிசிஐ அனுமதியளித்துள்ளது. ஆடவர் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் தோனி தலைமையில் ருதுராஜ் சிறப்பாக விளையாடி வருகிறார். 

ஆடவர் அணிக்கான போட்டிகள் செப்.28ஆம் நாள் தொடங்கி அக்.8ஆம் நாள் முடிவடைய உள்ளது.

ஆடவர் அணி: ருதுராஜ் கெயிக்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் த்ரிப்பாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அஹமது, ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் டுபே, ப்ரப்சிம்ரன் சிங் (கீப்பர்). 

மாற்று வீரர்கள்: யஷ் தாகுர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்ஷன். 

இந்திய மகளிர் அணி:

ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), மந்தனா, ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ( கீப்பர்), அமன்ஜோத் கெளர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, டிடாஸ் சது, ராஜேஸ்வரி கயாக்வாட், மின்னு மணி, கனிகா அகுஜா, உமா ஷெட்ரி ( கீப்பர்), அனுஷா பரெட்டி.

மாற்று வீராங்கனைகள்: ஹர்லீன் தியோல், காஷ்வீ கெளதம், ஸ்னே ராணா, சாயிகா, பூஜா வஸ்த்ரகர்.

செப்.19 முதல் 28 வரை மகளிர் அணிக்கான போட்டிகள் நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com