106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த ப்ராவோ! (விடியோ) 

பிரபல கிரிக்கெட் வீரர் டிவைன் ப்ராவோ 106 மீ. தூரம் சிக்ஸர் அடித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 
படம்: ட்விட்டர் | டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்
படம்: ட்விட்டர் | டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்

எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் ஜூலை 13 முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணிகளும் 3 அணிகளை விலைக்கு வாங்கி விளையாடுகிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 

மேலும் அமெரிக்காவினை சேர்ந்த 3 அணிகளுமாக மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.  

இதில் டிஎஸ்கே அணிக்காக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் டிவைன் ப்ராவோ விளையாடுகிறார். முதல் போட்டியில் அபாரமாக வென்ற டிஎஸ்கே தனது 2வது போட்டியில் வாஷிங்டன் ப்ரிடம் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தேல்வியுற்றது.

இந்தப் போட்டியில் டிஎஸ்கே தோல்வியுற்றாலும் ப்ராவோ அற்புதமாக விளையாடினார். இதில் 39 பந்துகளுக்கு 76 ரன்கள் அடித்து விளாசினார். அதிலும் நோர்க்யா ஓவரில் 10 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். 

17.2 ஓவரில் நோர்க்யா வீசிய பந்தில் 106 மீ. தூரம் சிக்ஸரும் அடித்து அசத்தினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com