மீண்டும் அணியில் தேர்வு: வாய்ப்பினை தக்க வைப்பாரா ஆண்டர்சன்?

இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு நடைபெறும் ப்ரத்யேகமான டெஸ்ட் போட்டி ஆஷஸ் என அழைக்கப்படுகிறது. 2-1 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 

தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 40 வயதாகும் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரியாக பந்து வீசவில்லையென பலரும் ஆண்டர்சனை குறைக்கூறி வந்தனர். அதன் தொடர்சியாக 3வது போட்டியில் அவர் விளையாடவில்லை. இருப்பினும் ஆண்டர்சன் டெஸ்டில் 688 விக்கெட்டுகளை எடுத்துள்ளதும் குறிபிடத்தக்கது. 

3வது போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டெழுந்துள்ளது. அணியில் 3 மாற்றங்களை செய்ததன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4வது ஆஷஸ் ஜூலை 19இல் தொடங்கவுள்ளது. இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட்டுக்கான 14 பேர் கொண்ட அணியை சமீபத்தில் அறிவித்தது. 3வது போட்டியில் ஆண்டர்சன் இல்லை. தற்போது விளையாடும் லெவனில் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.  

விளையாடும் இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பெயர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராவ்ளி, பென் டக்கட், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

4வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்த வாய்ப்பினை தக்க வைப்பாரா அல்லது வயது காரணமாக ஓரங்கட்டுப்படுவாரா என்பதற்கு பதில் ஆண்டர்சனின் ஃபர்பாமென்ஸிலே உள்ளது. 

ஆஸி. இன்னும் 4வது போட்டிகான அணியை அறிவிக்கவில்லை. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இடம் பெறுவார்களா என கிரிகெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com