ஓய்வு பெற விரும்பவில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது ஓய்வு பெற போவதில்லை என தெரிவித்துள்ளார். 
ஓய்வு பெற விரும்பவில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது ஓய்வு பெற போவதில்லை என தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஆஷஸ் தொடரில் அதிக அளவில் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆஷஸ் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று அவரது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 41 வயதாகும் அவர் இதுவரை 690 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணியின் சார்பில் டெஸ்ட் போட்டிகளில் தனிநபராக அதிகபட்சமாக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளவரும் அவரே. 

தனது ஓய்வு முடிவு குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் விருப்பம் தற்போது இல்லை. இங்கிலாந்து அணிக்காக இன்னும் நிறைய சாதிக்க இருப்பதாக நான் உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com