8 விக்கெட்டுகள் 15 ரன்கள்: ஸ்டூவர்ட் பிராடின் சிறந்த பந்து வீச்சு! (விடியோ)
By DIN | Published On : 30th July 2023 03:29 PM | Last Updated : 30th July 2023 03:33 PM | அ+அ அ- |

ஸ்டூவர்ட் பிராட் என்றதும் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்துதான் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்த மோசமான நிகழ்விற்கு பின்னர் பிராட் தன்னை சிறந்த டெஸ்ட் பௌலராக நிலை நிறுத்தினார். அந்த நாளுக்குப் பிறகுதான் நான் ஒரு வீரனாக உருவானேன் என பேட்டியளித்துள்ளார்.
37 வயதான பிராட் டெஸ்டில் 602 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது வேகப்பந்து வீச்சாளர்களில் இரண்டாவது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட் ஆகும். முதலிடத்தில் ஆண்டர்சன் (690) இருக்கிறார்.
இதையும் படிக்க: எந்தப் பாட்டு போட்டாலும் செட் ஆகுது: ஃபஹத் ஃபாசிலை கொண்டாடும் ரசிகர்கள்!
சர்வதேச டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வரிசையில் பிராட் 5வது இடத்தில் உள்ளார். முதலிடம் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள். மேலும் டேவிட் வார்னரை மட்டுமே 17 முறை விக்கெட் எடுத்து பிராட் சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிக்க: 10 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள்: தமன்னா பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்!
2015இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடியபோது ஸ்டூவர்ட் பிராட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த பௌலிங் வீசினார். வெறுமனே 15 ரன்களை கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பௌலிங்காக நிலைபெற்றுள்ளது.
The best spell in Stuart Broad's career.
— Johns. (@CricCrazyJohns) July 29, 2023
8 for 15 in Ashes - A legend. pic.twitter.com/dY8gfy6POO
ரசிகர்கள் இந்த விடியோவினை பதிவிட்டு, “ஹேப்பி ரிடையர்மெண்ட்” என வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...