இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை: விலை எவ்வளவு? எங்கு, எப்போது வாங்கலாம்? 

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடையின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது. 
படம்: ட்விட்டர் | இந்திய அணியின் புதிய சீருடை (ஒருநாள், டெஸ்ட், டி20)
படம்: ட்விட்டர் | இந்திய அணியின் புதிய சீருடை (ஒருநாள், டெஸ்ட், டி20)
Published on
Updated on
1 min read

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7-ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்திய அணியின் புதிய ‘கிட்-ஸ்பான்ஸர்’ அடிடாஸ் நிறுவனம் இந்த புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. அடுத்து 5 வருடங்கள் அடிடாஸ்தான் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் அமைக்குமென தெரிகிறது. இதற்காக ரூ.350 கோடி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த புதிய சீருடைகளை அடிடாஸின் இணையதளத்தில் (https://www.adidas.co.in/Indian_cricket_team) நாளை காலை 10 மணி முதல் ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிக்கான ஜெர்ஸியின் விலை தலா ரூ.4999, ஒருநாள் ரசிகர்கள் ஜெர்ஸியின் விலை ரூ.999 ஆகும்.

ஆடவர், மகளிர் இருவருக்குமான ஒருநாள், டி20, டெஸ்ட் அணிக்கான ஜெர்ஸிகளை ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். லேசான நீலக்கலரில் இருப்பது ஒருநாள் போட்டிக்கானது. அடர் நீல நிறத்தில் இருப்பது டி20க்கானது. வெள்ளை நிறம் டெஸ்ட் போட்டிகானது. 

அடிடாஸ் இணையதளத்தில் புதிய சீருடையின்  விலை விவரங்கள்
அடிடாஸ் இணையதளத்தில் புதிய சீருடையின்  விலை விவரங்கள்

இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் என அடுத்தடுத்த சர்வதேச தொடர்கள் விளையாடவுள்ள நிலையில், புதிய சீருடை அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com