
130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 29 சதங்கள் 58 அரை சதங்கள் அடித்துள்ளார். 2021 ஜனவரி முதல் விளையாடிய 24 டெஸ்டுகளில் 11 சதங்களை எடுத்து அற்புதமாக விளையாடி வருகிறார்.
தற்போது அயர்லாந்து அணியுடன் இங்கிலாந்து ஒரேயொரு டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆடிய அயர்லாந்து 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 524/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து அணியில் டக்கெட் 182 ரன்களும், ஒல்லி போப் 205 ரன்களும், ஜோ ரூட் 56 ரன்களும் எடுத்து அசத்தினர். ஜோ ரூட் இந்த அரை சதத்தின் மூலம் டெஸ்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் அலைஸ்டர் குக்கிற்கு (12, 472) பிறகு அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்தவராக ஜோ ரூட் (11,004) திகழ்கிறார். மேலும் அதிவேகமாக 11000 ரன்களை கடந்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாம் நாள் முடிவில் அயர்லாந்து 97/3 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து அணி இங்கிலாந்தை விட 255 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.