ஷுப்மன் கில் கேட்ச் விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டது: ரிக்கி பாண்டிங்

ஷுப்மன் கில்லின் கேட்ச் முதலில் தரையில் படுவது போல் தெரிந்தாலும், இந்த விஷயத்தில் மூன்றாம் நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஷுப்மன் கில் கேட்ச் விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டது: ரிக்கி பாண்டிங்

ஷுப்மன் கில்லின் கேட்ச் முதலில் தரையில் படுவது போல் தெரிந்தாலும், இந்த விஷயத்தில் மூன்றாம் நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 444 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயிர்த்தது. 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஷுப்மன் கில் 18 ரன்கள் எடுத்திருக்க ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் ஆனார். கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய மூன்றாம் நடுவருக்கு முறையீடு செய்யப்பட்டது. அப்போது கிரீன் பந்தினை கேட்ச செய்யும்போது பந்து தரையில் படுவது போல் தெரிந்தது. அதனால் நாட் அவுட் என முடிவு வரும் என எதிர்பார்த்த நிலையில், மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். இதனால், இந்த கேட்ச் விவகாரம் சர்ச்சையானது. தனது இந்த ஆட்டமிழப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் ஷுப்மன் கில்.

இந்த நிலையில், ஷுப்மன் கில்லின் கேட்ச் முதலில் தரையில் படுவது போல் தெரிந்தாலும், இந்த விஷயத்தில் மூன்றாம் நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து ஐசிசியில் பாண்டிங் கூறியதாவது: நான் கிரீன் கேட்ச் பிடித்ததை நேரலையில் பார்த்தபோது அது முழுமையாக பிடிக்கப்பட்டதாக எனக்கு தெரிந்தது. ஆனால், அதன்பின் காட்டப்பட்ட ரீ-பிளேக்களில் பந்து சரியாக பிடிக்கப்பட்டதா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் பந்தில் சிறு பகுதி தரையில் பட்டதாகவே நினைத்தேன். ஆனால், மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். அது நடுவர்களின் பார்வை. அதுதான் நேற்றைய நாளில் நடந்தது. இந்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் அதிகம் பேசுவார்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இதனை நாட் அவுட் என நினைப்பார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள அனைவரும் இதனை அவுட் என நினைப்பார்கள். இந்த விஷயத்தில் இறுதி முடிவு மூன்றாம் நடுவரிடமே விடப்பட்டது. கள நடுவர்கள் கொடுக்கும் சாஃப்ட் சிக்னல் இருந்து கள நடுவர் நாட் அவுட் என சாஃப்ட் சிக்னல் செய்திருந்தால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கலாம். நான் இதனை சொல்வதற்கு காரணம் என்னவென்றால் சாஃப்ட் சிக்னல் இல்லாமல் மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்திருக்கிறார். இறுதியில், மூன்றாம் நடுவர் சரியான முடிவை எடுத்ததாகவே நினைக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com