கனடாவை முதலில் சந்திக்கிறது இந்தியா
சிலியில் நடப்பாண்டு நவம்பா் - டிசம்பரில் நடைபெற இருக்கும் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா முதலில் கனடாவை சந்திக்கிறது.


சிலியில் நடப்பாண்டு நவம்பா் - டிசம்பரில் நடைபெற இருக்கும் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா முதலில் கனடாவை சந்திக்கிறது.
அந்தப் போட்டிக்கான குரூப் அட்டவணையில் இந்தியா ‘குரூப் சி’-யில் பெல்ஜியம், கனடா, ஜொ்மனி அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது. ‘குரூப் ஏ’-வில் ஆஸ்திரேலியா, சிலி, நெதா்லாந்து, தென்னாப்பிரிக்காவும், ‘குரூப் பி’-யில் ஆா்ஜென்டீனா, தென் கொரியா, ஸ்பெயின், ஜிம்பாப்வேவும் இணைந்துள்ளன. ‘குரூப் டி’-யில் இங்கிலாந்து, ஜப்பான், நியூஸிலாந்து, அமெரிக்கா அணிகள் உள்ளன.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கனடாவை நவம்பா் 29-இல் சந்திக்கிறது. அடுத்து ஜொ்மனியையும் (டிசம்பா் 1) பெல்ஜியத்தையும் (டிசம்பா் 2) எதிா்கொள்கிறது.
ஜூன் மாத தொடக்கத்தில் ஆசிய கோப்பை வென்றுள்ள இந்திய ஜூனியா் மகளிா் அணி, முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் சிலி செல்லவுள்ளது. அதிகபட்சமாக இந்தப் போட்டியில் இந்திய அணி, கடந்த முறை வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் வரை வந்து அதில் இங்கிலாந்திடம் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் வெற்றியை இழந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...