டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த ஜாஸ் பட்லர்! 

பிரபல இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 
கோப்புப் படம் ( ஜாஸ் பட்லர்)
கோப்புப் படம் ( ஜாஸ் பட்லர்)

2022இல் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாகப் பிரபல வீரர் ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டார். அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

டி20 பிளாஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் லாங்க்‌ஷிரியின் அணியில் விளையாடும் ஜாஸ் பட்லர் 39 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அசத்தினார். லியாம் லிவிங்ஸ்டன் 47 ரன்களும் எடுத்திருப்பார். இந்த வெற்றியின்மூலம் காலிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

இதற்கு முன்பாக டி20களில் 10 ஆயிரம் ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கிறிஸ் கெயில்(14,562). இந்த வரிசையில் பட்லர் 9வது இடத்தில் உள்ளார். 

போட்டி முடிந்தஒ பிறகு பட்லர், “நான் மிகவும் ரசித்து விளையாடினேன். லிவிங்ஸ்டனுடன் விளையாடும்போது சிறப்பான் அனுபவாமாக உள்ளது. அவர் எப்போது பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இதுபோல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால் ரன் ரேட்டினை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்” எனக் கூறினார். 

டி20களில் 10ஆயிரம் ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. கிறிஸ் கெயில் - 14,562 
  2. ஷொயிப் மாலிக்- 12,528 
  3. கைரன் பொலார்ட்- 12,175 
  4. விராட் கோலி- 11,965
  5. டேவிட் வார்னர் - 11,695
  6. ஆரோன் பின்ச்- 11,392 
  7. அலெக்ஸ் ஹேல்ஸ்- 11,214 
  8. ரோஹித் சர்மா- 11,035 
  9. ஜாஸ் பட்லர் - 10,080
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com