அதில் என்ன தவறு?: ரோஹித் சர்மா கேள்வி

இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களிலேயே விளையாட விரும்புவதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
அதில் என்ன தவறு?: ரோஹித் சர்மா கேள்வி
Published on
Updated on
1 min read

இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களிலேயே விளையாட விரும்புவதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தூரில் நடைபெற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றார்கள். 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஹெட் 49, லபுஷேன் 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த டெஸ்டில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்த லயன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

இந்தூர் ஆடுகளம் பற்றிய விமர்சனத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இதுபோன்ற சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களிலேயே நாங்கள் விளையாட விரும்புகிறோம். இதுதான் எங்கள் பலம். சொந்த மண்ணில் விளையாடும்போது உங்கள் பலத்துக்கு ஏற்றவாறு தான் விளையாடுவீர்கள். வெளியே என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்தியாவுக்கு வெளியே, அவரவர் பலத்துக்கு ஏற்றாற்போல் தான் விளையாடுகிறார்கள். எங்களுடைய பலமான சுழற்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களில் விளையாட விரும்புகிறோம். அதில் என்ன தவறு? நாங்கள் எண்ணியது போல் முடிவுகள் கிடைக்காவிட்டால் வேறுவிதமாக யோசிக்கலாம். ஆனால் நாங்கள் நன்கு விளையாடுகிறோம். எங்களுக்குத் தேவையான முடிவுகள் கிடைக்கின்றன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com