3-வது டெஸ்டில் தோற்றது ஏன்?: ரோஹித் சர்மா விளக்கம்

முதல் இன்னிங்ஸில் மோசமாக பேட்டிங் செய்ததே தோல்விக்குக் காரணம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
3-வது டெஸ்டில் தோற்றது ஏன்?: ரோஹித் சர்மா விளக்கம்

முதல் இன்னிங்ஸில் மோசமாக பேட்டிங் செய்ததே தோல்விக்குக் காரணம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தூரில் நடைபெற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றார்கள். 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஹெட் 49, லபுஷேன் 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த டெஸ்டில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்த லயன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

நீங்கள் ஒரு டெஸ்டில் தோற்றால் பல விஷயங்கள் உங்கள் வழிக்கு வரவில்லை என்று அர்த்தம். முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துள்ளோம். அவர்கள் 80-90 ரன்கள் முன்னிலை பெற்றபோதும் நன்கு பேட்டிங் செய்யவேண்டியிருந்தது. அதுவும் நடக்கவில்லை. ஆஸி. பந்துவீச்சாளர்களின் முக்கியமாக லயனின் பங்களிப்பை நாங்கள் சாதாரணமாக எண்ணவில்லை. ஆனால் ஆஸி. அணி பந்துவீச்சாளர்கள் ஒரே இடத்தில் பந்துவீசி ஆதாயம் பெறுவதற்கு வழிவகுத்து விட்டோம். நாங்கள் துணிச்சலுடன் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அப்படி விளையாடவில்லை. முதல் இரு டெஸ்டுகளில் நன்கு விளையாடினோம். இதுபோல டெஸ்டில் தோல்வியடைவது சிலசமயம் நடைபெறும். சில வீரர்கள் நன்கு விளையாட வேண்டும் என விரும்பினோம். அப்படி நடக்கவில்லை. நாங்கள் விரும்பியவாறு நாங்கள் விளையாடவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com