தடுமாறும் கே.எல். ராகுல்: ரிக்கி பாண்டிங் புதிய யோசனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் எடுக்கத் தடுமாறும் கே.எல். ராகுல், நடுவரிசையில் விளையாட வேண்டும் என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் யோசனை கூறியுள்ளார்.
தடுமாறும் கே.எல். ராகுல்: ரிக்கி பாண்டிங் புதிய யோசனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் எடுக்கத் தடுமாறும் கே.எல். ராகுல், நடுவரிசையில் விளையாட வேண்டும் என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் யோசனை கூறியுள்ளார்.

ஒரு வருடத்துக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் அரை சதமும் எடுத்தார் கே.எல். ராகுல். அத்தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்தவர் அவர்தான். (1-2 எனத் தொடரில் தோற்றது இந்தியா.) அடுத்து விளையாடிய சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் மோசமாகவே விளையாடினார். கடைசி 10 இன்னிங்ஸில் ஒருமுறையும் 25 ரன்களைக் கூட அவர் தாண்டவிலை. இதனால் கே.எல். ராகுலை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். இதையடுத்து 3-வது டெஸ்டில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக ஷுப்மன் கில் விளையாடினார்.

இந்நிலையில் கே.எல். ராகுல் பற்றி ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதியடைந்தால் அந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல், ஷுப்மன் கில் என இருவரையும் இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளலாம். ஷுப்மன் கில் தொடக்க வீரராகவும் கே.எல். ராகுல் நடுவரிசை வீரராகவும் விளையாடலாம். ஏனெனில் இங்கிலாந்தில் ஏற்கெனவே ராகுல் விளையாடியுள்ளார். ஒன்று மட்டும் நமக்குத் தெரியும், இங்கிலாந்தில் நீண்ட நேரம் பந்து ஸ்விங் ஆகும் என்று கூறியுள்ளார். 

ஆமதாபாத்தில் நடைபெறும் கடைசி டெஸ்டை இந்திய அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். இல்லாவிட்டால் நியூசிலாந்தில் இரு டெஸ்டுகளில் விளையாடும் இலங்கை அணி அந்த இரு டெஸ்டுகளையும் வெல்லாமல் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com