பேட்டிங் காரணமாக கே.எஸ். பரத் நீக்கப்படுகிறாரா?: ஆகாஷ் சோப்ரா எழுப்பும் கேள்விகள்

சரியாக விளையாடாத பேட்டரை அணியிலிருந்து நீக்குங்கள் என்றார். 
பேட்டிங் காரணமாக கே.எஸ். பரத் நீக்கப்படுகிறாரா?: ஆகாஷ் சோப்ரா எழுப்பும் கேள்விகள்

சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து வரும் கே.எஸ். பரத்தை அவருடைய பேட்டிங் திறமையைக் கொண்டு அணியிலிருந்து நீக்கக் கூடாது எனக் கூறியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் கே.எஸ். பரத்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.

4-வது டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங்கை வலு சேர்க்க விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:

ஒரு விக்கெட் கீப்பராக அபாரமாகச் செயல்பட்டு வருகிறார் கே.எஸ். பரத். தில்லி டெஸ்டில் நன்கு விளையாடி ரன்கள் எடுத்தார். அணியில் உள்ள முக்கியமான பேட்டர்களே சரியாக விளையாடாதபோது, பேட்டிங்குக்குப் பங்களிக்காத காரணத்தால் பரத் வெளியேற்றப்பட்டால் அது கேலிக்குரியதாக அமைந்துவிடும் என்றார். பிறகு இதுகுறித்த ட்விட்டர் உரையாடலில் அவர் மேலும் கூறியதாவது:

பரத்தின் முக்கியப் பணி, விக்கெட் கீப்பிங்காகும். அந்தத் துறையில் நாட்டில் அவரே தலை சிறந்தவர். அவருக்கு முன்பு களமிறங்கும் பேட்டர்கள் சரியாக விளையாடாத நிலையில் அதற்கான தண்டனையை அவர் ஏன் அனுபவிக்க வேண்டும்? உங்களுக்கு ரன்கள் வேண்டுமென்றால், சரியாக விளையாடாத பேட்டரை அணியிலிருந்து நீக்குங்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com