
ஆமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் டிரா ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.
ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வாகியுள்ளார். தொடர் நாயகன் விருது அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸி. பேட்டர் கவாஜா முதலிடம் பெற்றுள்ளார்.
டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்
1. கவாஜா (ஆஸ்திரேலியா) - 333 ரன்கள் (1 சதம், 2 அரை சதங்கள்)
2. கோலி (இந்தியா) - 297 ரன்கள் (1 சதம்)
3. அக்ஷர் படேல் (இந்தியா) - 264 ரன்கள் (3 அரை சதங்கள்)
4. லபுஷேன் (ஆஸ்திரேலியா - 244 ரன்கள் (1 அரை சதம்)
5. ரோஹித் சர்மா (இந்தியா) - 242 ரன்கள் (1 சதம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.