ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தான் அணிக்குப் புதிய பயிற்சியாளர்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காகப் புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

News image

உமர் குல்

Updated On :15 மார்ச் 2023, 6:24 am

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காகப் புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

டி20 தொடரில் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி, பகார் ஸமான், ஹாரிஸ் ராஃப் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை. ஷதாப் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடர் மார்ச் 24 முதல் தொடங்கவுள்ளது.

சக்லைன் முஷ்டாக்கின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து பாகிஸ்தான் அணிக்குப் புதிய பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்குப் பயிற்சியளித்த மிக்கி ஆர்துர், ஆலோசகராகப் பணியாற்றவுள்ளார். 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காகப் புதிய பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தலைமைப் பயிற்சியாளராக அப்துல் ரஹ்மானும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உமர் குல்லும் பேட்டிங் பயிற்சியாளராக முகமது யூசுஃப்பும் செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.