ரிஷப் பந்த்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான விடியோ!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்துக்குப் பிறகு தனது நிலை குறித்து புதிய விடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.
ரிஷப் பந்த்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?  வெளியான விடியோ!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்துக்குப் பிறகு தனது நிலை குறித்து புதிய விடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர்களில் ரிஷப்பும் ஒருவர். அவர் ஐபிஎல் போட்டிகளில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக 2021 மற்றும் 2022 ஆம் ஆகிய ஆண்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். அதன்பின், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறார். கார் விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இருப்பினும், அவரது அணியை ஊக்கப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளைக் காண நேரடியாக மைதானத்துக்கு வந்தார் ரிஷப் பந்த்.

இந்த நிலையில், ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கிங் ஸ்டிக் உதவியின்றி நடக்கும் விடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அந்த விடியோவுக்கு இனிமேல் வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை எனத் தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் இருப்பதாவது: ரிஷப் பந்த் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து வருகிறார். கொஞ்ச தூரம் வந்தவுடன் அவரது வாக்கிங் ஸ்டிக்கை அருகில் உள்ளவரிடம் தூக்கியெறிந்து வாக்கிங் ஸ்டிக் உதவியின்றி தானாக நடப்பதாக அந்த விடியோவில் உள்ளது.

ரிஷப் பந்த் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com