ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
தொட்டக்க வீரர்களாக இஷா கிஷன், கேம்ரூன் கிரின் விளையாடினார்கள். வழக்கமாக ரோஹித் களமிறங்குவார். ஆனால் இன்று வித்தியாசமாக 3வது இடத்தில் விளையாடினார். இந்தப் போட்டியிலும் பூச்சியத்தில் (டக்கவுட்) அவுட் ஆனார். தீபக் சஹார் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். முந்தைய போட்டியிலும் டக்கவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 16 முறையாக டக்கவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சாதனையில் ரோஹித் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுனில் நரைன் (15முறை) 2வது இடத்தில் உள்ளார்.
தற்போது சூர்யகுமார் யாதவ் (13) , வதோரா(8) விளையாடி வருகின்றனர். 6 ஓவர் முடிவில் மும்பை அணி 33/3 ரன்கள் எடுத்துள்ளது. தீபக் சஹார் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.