கோப்புப் படம் (டேரன் சமி)
கோப்புப் படம் (டேரன் சமி)

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உலகக் கோப்பை வென்ற வீரர் பயிற்சியாளராக நியமனம்! 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இரண்டு முறை உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்த டேரன் சமி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
Published on

டேரன் சமி தலைமையில் டி20 உலகக் கோப்பையை 2012, 2016 என இருமுறை மே.இ. தீவுகள் அணி வென்றுள்ளது. அவருக்கு 2016இல் செயிண்ட் லூச்யாவிலுள்ள பியாஸ்ஜார் கிரிக்கெட் மைதானத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

39 வயது சமி, மே.இ, தீவுகள் அணிக்காக 38 டெஸ்டுகள், 126 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2017-ல் விளையாடினார். ஏற்கனவே மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அல்லாத இயக்குநராக டேரன் சமி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் டேரன் சமியை மே.இ. தீவுகள் அணிக்கு (ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு) தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஆண்ட்ரே கோலேயை டெஸ்ட் போட்டிக்கு தலைமை பயிற்சியாளராக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமி கூறியதாவது: 

இது சவாலன விஷயமாக இருந்தாலும் எனக்கு பிடித்திருக்கிறது. நான் தயாரக இருக்கிறேன். நான் வீரராக இருந்தபோது ஏற்படுத்திய அதே தாக்கத்தை டிரெஸ்ஸிங் ரூமில் தற்போதும் ஏற்படுத்துவேன். கிரிக்கெட் மீதான ஆர்வம், வெற்றியின் ஆசை, மே.இ.தீவுகள் மீதான அளவற்ற அன்பையும் அவர்களுக்கு கற்றுத் தருவேன். எனது திறமையை வீரர்களுக்கு கற்றுத்தர ஆவலுடன் இருக்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com