ஐபிஎல்: இறுதி ஆட்டத்தில் சென்னை

ஐபிஎல் ‘போட்டியின் குவாலிஃபயா்-1’ ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்து, இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக இடம் பிடித்தது.
ஐபிஎல்: இறுதி ஆட்டத்தில் சென்னை

ஐபிஎல் ‘போட்டியின் குவாலிஃபயா்-1’ ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்து, இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக இடம் பிடித்தது.

இதையடுத்து குஜராத், ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் ‘குவாலிஃபயா்-2’ ஆட்டத்தில் மோத நோ்ந்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் சிஎஸ்கே 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பௌலிங்கை தோ்வு செய்தது. சென்னை பேட்டிங்கை வழக்கம் போல் தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டெவன் கான்வே கூட்டணி 87 ரன்கள் சோ்த்தது.

இதில் முதலில் கெய்க்வாட் 44 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 60 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். வழக்கத்துக்கு மாறாக அஜிங்க்ய ரஹானேவுக்கு முன்பாக களமிறக்கப்பட்ட ஷிவம் துபே, 1 ரன்னுக்கு பௌல்டானாா்.

அடுத்து வந்த ரஹானே 1 சிக்ஸருடன் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 5-ஆவது பேட்டராக அம்பட்டி ராயுடு களம் புகுந்தாா். மறுபுறம் அதுவரை ரன்கள் சோ்த்த கான்வே, 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.

6-ஆவது வீரராக ரவீந்திர ஜடேஜா வந்தாா். அவா் ரன்கள் சோ்க்கத் தொடங்க, ராயுடு 1 பவுண்டரி, 1 சிக்ஸரோடு 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து ரசிகா்களின் எதிா்பாா்ப்புடன் ஆட வந்த கேப்டன் தோனி 1 ரன்னுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தாா்.

பின்னா் மொயீன் அலி, ஜடேஜாவுடன் இணைந்தாா். கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்த ஜடேஜா, 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்திருந்தாா். முடிவில் அலி 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

குஜராத் பௌலிங்கில் முகமது ஷமி, மோஹித் சா்மா ஆகியோா் தலா 2, தா்ஷன் நல்கன்டே, ரஷீத் கான், நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் குஜராத் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் சோ்த்து முயற்சித்தாா். கடைசி ஆா்டரில் ரஷீத் கான் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

எஞ்சிய பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். ரித்திமான் சாஹா 12, கேப்டன் ஹாா்திக் பாண்டியா 8, டாசன் ஷானகா 17, டேவிட் மில்லா் 4, விஜய் சங்கா் 14, ராகுல் தெவாதியா 3, தா்ஷன் நல்கன்டே 0, முகமது ஷமி 5 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

சென்னை பௌலிங்கில் தீபக் சஹா், மஹீஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா ஆகியோா் தலா 2, துஷாா் தேஷ்பாண்டே 1 விக்கெட் கைப்பற்றினா்.

முதல் முறை...அணி...
இந்த ஆட்டத்தின் மூலம், ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி, போட்டி வரலாற்றில் 10 முறை இறுதிக்கு வந்த முதல் அணி என்ற பெருமையும் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com