லக்னௌ அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்கப்பட்ட மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர்!

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் ரோமாரியோ ஷெப்பர்டு டிரேடிங் முறையின் மூலம் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு   வெற்றிகரமாக விற்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான ரோமாரியோ ஷெப்பர்டு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மூலம் 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கினார்.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது அவரை லக்னௌவிடமிருந்து வாங்கியுள்ளது. ரோமாரியோ ஷெப்பர்டு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் முக்கிய வீரராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபில் ஏலத்தின்போது ரோமாரியோ ஷெப்பர்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 7.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும், அந்த சீசனில் அவர் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com