இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு நம்பிக்கையளித்தது: ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்

இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும்  வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின்  பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்தார்.
இந்திய அணிக்கு எதிரான ஆட்டம்  எங்களுக்கு நம்பிக்கையளித்தது: ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்

இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும் வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்த வெற்றிகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகக் கோப்பையின் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. தங்களது அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பினையும் ஆப்கானிஸ்தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும்  வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு வந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், எங்களுக்கு அந்தப் போட்டி நம்பிக்கையளித்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி கிட்டத்தட்ட 300 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான்  பாகிஸ்தானுக்கு எதிரான பல போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியடைந்தது. ஆசியக் கோப்பையிலும் அதே நிலையே தொடர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டிக்கு நாங்கள் எங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற நாங்கள் நிறைய உழைக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இந்த உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியடைவதற்கு பல விஷயங்களை அளித்துள்ளது என்றார்.

ஆப்கானிஸ்தான் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com