சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கனுக்கு எதிரான ஆட்டம்: தென்னாப்பிரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு 246 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :10 நவம்பர் 2023, 1:04 pm

DIN

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு 246 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. 

ஆப்கானிஸ்தான் அணியின் ஒமர்சாய் ஆட்டமிழக்காமல் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். நூர் அகமது மற்றும் ரஹ்மத் ஷா தலா 26 ரன்கள் சேர்த்தனர். 

ஆமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே உலகக் கோப்பையின் 42வது ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடியது. 

ஆப்கானிஸ்தான் அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குர்பாஸ் 25 ரன்னிலும், ஜத்ரன் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு வந்த ரஹ்மத் ஷா 26 ரன்களில் வெளியேறிய நிலையில், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த இக்ராம் அலிகில் 12, முகமது நபி 2, ரஷீத் கான் 14, நூர் அகமது 26, முஜீப் உர் ரஹ்மான் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை ஆடிய அஸ்மதுல்லா உமர்சாய் 107 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 97 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 

முடிவில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை சேர்த்தது. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.