மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்: வெற்றியுடன் லீக்கை முடித்த ஆஸி.! 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்: வெற்றியுடன் லீக்கை முடித்த ஆஸி.! 

உலகக் கோப்பையின் 43வது லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் ஸ்டார்க், மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மித், சீன் அப்பாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டௌஹித் ரிதோய் 74 ரன்களும் ஷாண்டே 45 ரன்களும் மஹமதுல்லா 32 ரன்களும் லிட்டன் தஸ், டஞித் ஹாஸன் தலா 36 ரன்களும் எடுத்தார்கள். ஆஸி. சார்பில் ஜாம்பா, சீன் அப்பாட் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க வார்ரும் மிட்செல் மார்ஷும் சிறப்பாக விளையாடினார்கள். வார்னர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஸ்மித் 63 ரன்களும் மிட்செல் மார்ஷ் 177 ரன்களும் எடுத்தார்கள். 44.4 ஓவரில் 307/2 ரன்கள் எடுத்து ஆஸி. வெற்றி பெற்றது. 

மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 177 ரன்கள் எடுத்தார். 
மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 177 ரன்கள் எடுத்தார். 

இதன்மூலம் லீக் போட்டியை வெற்றியுடன் முடுத்துள்ளது ஆஸி. அணி. முதல் 2 போட்டிகளை தோல்விகளில் ஆரம்பித்தாலும் அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகி அசத்தியுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கவுடன் நவ.16ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com