மகள்களுடன் இணைந்து தீபாவளி வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய மக்களுக்கு விடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.  
மகள்களுடன் இணைந்து  தீபாவளி வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்! 

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். 37 வயதாகும் இவர் டெஸ்டில் 8,487 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6,896 ரன்களும், டி20 போட்டிகளில் 2,894 ரன்களு எடுத்துள்ளார்.

176 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வார்னர் 6,397 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஐபிஎல் கிரிகெட்டின்போது இந்திய ரசிகர்களின் அன்பினை பெற்றார். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்யும் ரீல்ஸ்கள் மிகவும் புகழ் பெற்றவை. 

இந்தியா மீது கொண்ட அன்பினால் தன் இரண்டாவது மகளுக்கு இண்டி-ரே எனப் பெயரிட்டுள்ளார். 

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, “எல்லோருக்கும் வணக்கம். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். இங்கு என்னை சிறப்பாக கவனித்த் கொள்கிறார்கள். அதற்கு மிக்க நன்றி. எனகு ஆதரவு தெரிவிக்கும் அனைருக்கும் நன்றி. பிடித்தவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். இந்தத் தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும்  அளிக்கும். பாசிட்டிவிட்டியை (நேர்மறையான விஷயம்) பரப்புவோம்” எனக் கூறினார். மேலும் அந்த விடியோவில் வார்னரின் 3 பெண் குழந்தைகளும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறுகிறார்கள். 

இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 4 இலட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது இந்த விடியோ . 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com