உலகக் கோப்பையில் மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்! 

உலகக் கோப்பையில் மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்! 

பிரபல பாகிஸ்தான் பந்து வீச்சாளர் உலகக் கோப்பையில் மோசமான சாதனையை படைத்துள்ளார். 
Published on

பாகிஸ்தானை சேர்ந்த 30 வயதான பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப், 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 62 டி20க்களில் 83 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

நேற்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 337/9 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து. 338 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 ஓவா்களிலேயே 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்தப் போட்டியில் ஹாரிஸ் ராஃப் 10 ஓவர்களுக்கு 63 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார், ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மோசமாக பந்து விசி தேவையற்ற சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது, ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிகமான ரன்களை (533)விட்டுக்கொடுத்த பௌலராக ஹாரிஸ் ராஃப் இருக்கிறார். 

இந்தப் பட்டியலில் உள்ள வீரர்கள் விபரம்: 

  1. ஹாரிஸ் ராஃப் - 533 ரன்கள் - 2023 உலகக் கோப்பை 
  2. ஆடில் ரஷித் - 526 ரன்கள் - 2019 உலகக் கோப்பை 
  3. தில்சன் மதுஷனகா - 525 ரன்கள் - 2023 உலகக் கோப்பை 
  4. மிட்செல் ஸ்டார்க் - 502 ரன்கள் - 2019 உலகக் கோப்பை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com